தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்.

சென்னை சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள், இன்று ஒரு நாள் வள்ளூவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்எல்ஏ.,க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டனர். அங்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தை தண்ணீர் குடித்து நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி. மாலை 5 மணி அளவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கபட்டனர்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி பேசும் போது, அ.தி.மு.க.வை ஒடுக்க நினைத்தால் எந்த காலத்திலும் நடக்காது; இது எம்.ஜி.ஆர். தோற்றுவித்த இயக்கம், அதனை கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை கடந்து தமிழகத்தின் முதன்மையான கட்சியாக திகழ்ந்தது அ.தி.மு.க. அ.தி.மு.க.வின் ஜனநாயக உரிமையை பறிக்க திமுக சதி செய்கிறது. என்னை சந்தித்து ஆதரவு தெரிவித்த ஜி.கே.வாசன், நயினார் நாகேந்திரன்,கிருஷ்ணசாமி ஆகியோருக்கு நன்றி என கூறினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply