புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் இந்தியாவின் முதல் அலுமினிய சரக்கு ரேக் – 61 போப்ரணலக்ஷ்மியை அஷ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.

இந்தியாவின் முதல் அலுமினிய சரக்கு ரயில் – 61 போப்ரணலக்ஷ்மியை  புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை  அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று (16-10-2022) திறந்து வைத்தார். இந்த ரயில் செல்லும் இடம் பிலாஸ்பூர் ஆகும்.

ஆர்டிஎஸ்ஓ, ஹிண்டால்கோ மற்றும் பெஸ்கோ

வேகன் போன்றவற்றுடன் இணைந்து உள்நாட்டிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால், ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்திற்கான அர்ப்பணிப்பு முயற்சி இது என்றார் அமைச்சர்.

அலுமினிய ரயிலின் முக்கிய அம்சங்கள்:  மேற்கட்டுமானத்தில் வெல்டிங் இல்லாமல் முழுமையாக இணைக்கப்பட்ட கட்டுமானம், சாதாரண எஃகு ரயில்களை காட்டிலும் 3.25 டன்கள் எடை குறைவு, 180 டன் கூடுதல் பொருட்களை சுமந்து செல்லும் திறன், இதன் விளைவாக இந்த வேகன் அதிக செயல்திறன் கொண்டதாக அமைகிறது.

திவாஹர்

Leave a Reply