காந்திநகரில் 12-வது பாதுகாப்புக் கண்காட்சியின் ஒரு பகுதியாக இந்திய- ஆப்பிரிக்க பாதுகாப்பு பேச்சுவார்த்தைக் கூட்டம்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற உள்ள 12-வது பாதுகாப்புக் கண்காட்சியின் ஒரு பகுதியாக அக்டோபர் 18-ஆம் தேதி இந்திய- ஆப்பிரிக்க பாதுகாப்பு பேச்சுவார்த்தை சந்திப்பின்போது ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார். ‘இந்திய-ஆப்பிரிக்கா: ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஒருங்கிணைத்து, வலுப்படுத்துவதற்கான உத்தியைக் கையாளுதல்’ என்பது இந்தக் கூட்டத்தின் கருப்பொருளாகும்.

இந்தியாவும், ஆப்பிரிக்காவும் நெருங்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவைக் கொண்டுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட கம்பாலா கோட்பாடுகளால் ஆப்பிரிக்கா குறித்த இந்தியாவின் அணுகுமுறை வழி நடத்தப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பாதுகாப்புக் கண்காட்சியின் போது உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் முதன் முதலில் இந்திய- ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சர்களின் உச்சிமாநாடு நடைபெற்றது, குறிப்பிடத்தக்கது.

எம்.பிரபாகரன்

Leave a Reply