தேசிய கல்விக் கொள்கை பழமையை நவீனத்துடன் இணைக்கிறது மற்றும் உலகில் அனைத்துவகையிலும் சிறந்த குடிமக்களை உருவாக்கப் பாடுபடுகிறது!- தர்மேந்திர பிரதான்.

சூரத்கல் என்ஐடியின் 20வது பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை  அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார்.

தேசிய கல்விக் கொள்கை 2020 பற்றிப் பேசிய அவர்,இது  21ஆம் நூற்றாண்டின் தத்துவ ஆவணமாகும், பழமையை  நவீனத்துடன் இணைத்து உலகில் அனைத்துவகையிலும்  சிறந்த குடிமக்களை உருவாக்கப்  பாடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். சுவாமி விவேகானந்தர் மற்றும் அவரது வழிகாட்டும் தத்துவம் குறித்தும் அவர் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின்  கடந்த சுதந்திர தின உரையிலிருந்து “ஜெய் அனுசந்தன்” என்ற அழைப்பை அவர் நினைவு கூர்ந்தார். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047ஆம் ஆண்டின்போது, இந்தியாவை வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தரவு பகுப்பாய்வு, மின்னணுவியல், ஜீனோம் எடிட்டிங், 3 டி பிரிண்டிங் போன்ற தொழில்துறைக்கு முன்னோக்கி செல்லும் வழிகளைப் பற்றி திரு பிரதான் பேசினார். மனிதகுலத்தின் எதிர்கால வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்றும், விஸ்வ-குருவாக அதன் பெருமையை மீட்டெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் 126 பிஎச்.டி., 817 முதுநிலை  மற்றும் 844 பி.டெக் தேர்ச்சிபெற்றவர்கள்  உட்பட மொத்தம் 1787 பெருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், ஒன்பது பி.டெக் மாணவர்களும் முப்பது முதுநிலை மாணவர்களும் மற்ற நிறுவனங்களால் நிதியுதவி செய்யப்பட்ட தங்கப் பதக்கங்கள் மற்றும் பிற பதக்கங்களைப் பெற்றனர். திரு தர்மேந்திர பிரதான் பட்டதாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

திவாஹர்

Leave a Reply