இந்தியாவின் ராஷ்ட்ரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனம், ஜெர்மனியின் கே பிளஸ் எஸ் மிடில் ஈஸ்ட் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு .

இந்தியாவின் ராஷ்ட்ரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனம், ஜெர்மனியின் கே பிளஸ் எஸ் மினரல்ஸ் அண்ட் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் உபநிறுவனமான கே பிளஸ் எஸ் மிடில் ஈஸ்ட் நிறுவனம்  ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்துள்ளார்.  இந்த ஒப்பந்தம் கடந்த 6-ந் தேதி கையெழுத்தானது. கலப்பு உரங்களின் பல்வேறு நிலையிலான உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், விவசாய சமுதாயத்தினருக்கு எம்ஓபி உரம் கிடைப்பதை மேம்படுத்தவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகைசெய்கிறது.  மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு பகவந்த் குபா உடனிருந்தார்.

 விவசாயிகளுக்கு உரம் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் உள்நாட்டு உர உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.  உர உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளுடன் நீண்டகால நட்புறவுக்கு இது வழிவகை செய்கிறது.  உரம் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை நம்பியிருக்கும் இந்தியா, உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், நிலையான விலையை பராமரிக்கவும் இது உதவும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக  கே பிளஸ் எஸ் நிறுவனம் ஆண்டுக்கு  1 லட்சத்து 5 ஆயிரம் மெட்ரிக்டன் பொட்டாஷ் உரங்களை 2022 முதல் 2025 வரை இந்தியாவுக்கு சப்ளை செய்யும்.

திவாஹர்

Leave a Reply