இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழா மற்றும் நூற்றாண்டு விழா நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ  சண்டிகரில் இன்று (09-10-2022)  பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் (பிஇசி)யின் 52வது பட்டமளிப்பு விழா மற்றும் நூற்றாண்டு விழா நிறைவு விழாவில் கலந்து கொண்டார் சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், 1921ஆம் ஆண்டு லாகூரில் நிறுவப்பட்ட பிஇசி, ஆராய்ச்சிக்கான முன்னணி நிறுவனமாக உருவெடுத்து, உலகளாவிய தொழில்நுட்ப மாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது என்றார்.

பஞ்சாப் பொறியியல் கல்லூரி நாட்டின் முதன்மையான நிறுவனம் மற்றும் இந்தப் பகுதியில் தொழில்நுட்ப கல்வியின் முன்னோடியாக விளங்குகிறது என்றார்.

தேசியக் கல்விக் கொள்கை- 2020 தெளிவு படுத்துவது என்னவெனில், ஒரு நல்ல கல்வி நிறுவனம் என்பது ஒவ்வொரு மாணவரையும் வரவேற்று, கவனம் செலுத்தப்பட்டு, நல்ல உள்கட்டமைப்பு மற்றும் தேவையான வளங்களைக் கொண்ட ஊக்கமளிக்கும் சூழல் நிலவ வேண்டும் என்பதாகும்.

பிஇசிக்கு இந்த அனைத்து தரமும் இருப்பது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைந்தார். இந்த கல்லூரி தொடர்ந்து சிறந்து விளங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொழில்நுட்பம், தொழில், குடியுரிமைச் சேவைகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் நாட்டிற்கு பிஇசி பல மேதைகளை வழங்கியுள்ளது என்பதை குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அவர்களில் சிலர்: இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர். சதீஷ் தவான், புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் ஐஐடி, புதுதில்லியின் நிறுவனர்-இயக்குனர், பேராசிரியர் ஆர்.என். டோக்ரா,

ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் வியூக அமைப்பின் நிபுணர் டாக்டர். சதீஷ் குமார், அறிவியலுக்காக சுய தியாகத்தின் உத்வேகம் மிகுந்த வரலாற்றை உருவாக்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிஇசியின் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் துறையின் முன்னாள் மாணவியாகும் என்று அவர் கூறினார்.

பிஇசியில் ஜியோஸ்பேஷியல் டெக்னாலஜி துறையில் கல்பனா சாவ்லா என்று இருக்கை  நிறுவப்பட்டிருப்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறினார். நாட்டின் முன்னேற்றத்திற்கு அதிக உத்வேகம் அளிக்க தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பெண் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.

பட்டம் பெற்ற மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, வரம்புகள் இல்லாத வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகள் நிறைந்த உலகில் நீங்கள் அடியெடுத்து வைக்கின்றீர்கள். நீங்கள் வாய்ப்புகளை சாதகமாக்கி வெற்றியடைந்து, சாத்தியங்களை நிச்சயமானதாகவும் மாற்றும் திறன் கொண்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் தாய்நாட்டிற்கான உங்கள் கடமைகளை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்றும் நாளைய இந்தியாவை உருவாக்குபவர்கள் நீங்களே என்றும் கூறினார்.

இந்த சிறப்புமிக்க கல்வி நிறுவனத்தில் பெற்ற அறிவை நீங்கள் மனிதகுல சேவையிலும் பயன்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.

மகாத்மா காந்தியின் ‘சர்வோதயா’  குறித்த உறுதிப்பாட்டை மாணவர்கள் தங்களின்  தனிப்பட்ட முன்னுரிமைகளில் வைத்திருக்கும்படி குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.

தேசத் தந்தையின் தத்துவங்களை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின், குறிப்பாக இளைஞர்களின் தார்மீகக் கடமை என்றும் அவர் கூறினார்.

பிஇசி-யின் பட்டமளிப்பு விழாவிற்கு சற்று முன்பாக,  சண்டிகர் யூனியன் பிரதேச சட்டமன்ற தலைமைச் செயலகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply