ரஷ்யாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது என்ற எந்தவொரு சர்வதேச நிர்பந்தமும் இந்தியாவுக்கு இல்லை! – பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி.

ரஷ்யாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது என்ற எந்தவொரு சர்வதேச நிர்பந்தமும் இந்தியாவுக்கு இல்லை என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் . ஹர்தீப்சிங் பூரி கூறியுள்ளார்.

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், வாஷிங்டனில் அந்நாட்டு பெட்ரோலியத்துறை அமைச்சர் திருமதி. Jennifier Granholm-வுடன் பேச்சு நடத்திய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்தியா பெட்ரோலியப் பொருட்களை கொள்முதல் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெட்ரோலியப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதனை ஈடு செய்வதற்கு ஏதுவாக எண்ணெய் கொள்முதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் திரு. ஹர்தீப்சிங் பூரி குறிப்பிடடார்

எம்.பிரபாகரன்

Leave a Reply