சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் முனையம் வரையிலான திட்டம் டிசம்பர் -2024-க்குள் நிறைவடையும்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,புதிய இந்தியாவில் தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், ரூ.5800 கோடி செலவில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் முனையம் வரையிலான இணைப்பு  பணிகள் நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை துறைமுகத்தில் தொடங்கி மதுரவாயல் வரை  உயர்த்தப்பட்டு கட்டப்பட்டு வரும் 20.5 கிலோ மீட்டர் தொலைவிலான பாலம் 4 பகுதிகளாக கட்டப்படும் என்று கூறியுள்ளார்.

இத்திட்டம் டிசம்பர் 2024-ம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்றும், இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும் என்றும், அதேபோல். காத்திருப்பு காலம் 6 மணி நேரம் குறையும் என்றும் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply