உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

உத்திரப்பிரதேசத்தின் பதோஹியில் அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தாண்டு, நவராத்திரி செப்டம்பர் 26ம் தொடங்கி தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்துவமான பூஜை சடங்குகளுடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் முக்கிய நிகழ்வாக துர்கா பூஜை பண்டிகை நேற்று நாட்டின் வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பந்தலில் இரவு 9:30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவத்தின் போது பந்தலுக்குள் சுமார் 300 பேர் இருந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். இருப்பினும் விழா பந்தலில் ஏற்பட்ட தீ மளமளவென பரவிய நிலையில், பலரின் உடலிலும் தீப்பற்றியது.

இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply