ரயில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோதி ஒப்புதல்.

ரயில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு சமமான  உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோதி ஒப்புதல் அளித்துள்ளார்.அரசிதழ் பதிவு பெறா ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படுவதாகவும், இதன்மூலம் நாடு முழுவதும் 11 லட்சத்து 27 ஆயிரம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும் ரயில்வே கூறியுள்ளது.ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஆயிரத்து 832 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply