மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டிஆர்டிஓ தலைவர் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, புதுதில்லி டிஆர்டிஓ பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு டிடிஆர் அன்ட் டி செயலாளரும், டிஆர்டிஓ இயக்குநருமான டாக்டர் சமீர் வி காமத், தலைமை இயக்குநர்கள், இயக்குநர்கள் மற்றும் பிற அதிகாரிகள், ஊழியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு இயக்கத்துடன், தூய்மை இயக்கமும் இன்று தொடங்கப்பட்டது.

மாநில அரசுகளின் நிலுவையில் உள்ள குறிப்புகள், அமைச்சகங்களுக்கு இடையே நிலுவையில் உள்ள குறிப்புகள் (அமைச்சரவை குறிப்பு), 3 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள நாடாளுமன்ற உத்தரவாதங்கள், நிலுவையில் உள்ள பொதுமக்கள் குறைகள் மற்றும் மேல் முறையீடுகள், தூய்மை பிரச்சார தளங்களை அடையாளம் காணுதல், விண்வெளி மேலாண்மை திட்டமிடல், ஸ்க்ராப் அப்புறப்படுத்தல் போன்றவற்றில், சிறப்புப் பிரச்சாரத்தின் போது சிறப்பு கவனம் செலுத்தப்படும். 2022 அக்டோபர் 2 முதல் 2022 அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் தூய்மை 2.0 சிறப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.

மேலும், ஃபிட் இந்தியா விடுதலை ஓட்டம் 3.0 இன் ஒரு பகுதியாக இன்று டிஆர்டிஓ தலைமையகத்தில் ஃபிட் இந்தியா ப்ளாக் ஓட்டம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஓட்டத்தில் 250க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த முயற்சியின் மூலம், ஃபிட் இந்தியா இயக்கம், தூய்மை இந்தியா இயக்கத்துடன் இணைகிறது. டிஆர்டிஓ தலைமையகத்தின் பல்வேறு இயக்குனரகங்களால் அந்தந்த பகுதிகளிலும் அலுவலகங்களிலும் தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

திவாஹர்

Leave a Reply