இந்திய புவிசார் பொருளாதாரம் 12.8% வளர்ச்சி விகிதத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் ரூ.63,100 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப் பொறுப்பு) புவி அறிவியல் துறை (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்வு , ஓய்வூதியங்கள், விண்வெளி மற்றும் அணுசக்தி துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங்,   இந்தியாவின் புவிசார் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டுக்குள் 12.8% வளர்ச்சி விகிதத்தில் ரூ.63,100 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், நிலையான உள்கட்டமைப்பு திட்டமிடல், பயனுள்ள நிர்வாகம் மற்றும் பண்ணை துறைக்கு உதவுதல் ஆகியவற்றின் மூலம் சமூக-பொருளாதார வளர்ச்சியில் புவிசார் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.

அக்டோபர் 10 முதல் 14 வரை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள  இரண்டாவது ஐக்கிய நாடுகளின் உலக புவிசார் தகவல் காங்கிரஸ் பற்றி ஊடகங்களுக்கு விளக்கிய டாக்டர் சிங், இரண்டாவது காங்கிரஸ்  அரசின் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் ஒத்திசைக்கப்படுவதால் முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.

இந்த மாநாட்டில் 700க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் சுமார் 120 நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் உட்பட 2000 பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். மேலும், 255 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட சர்வே ஆஃப் இந்தியா போன்ற தேசிய மேப்பிங் ஏஜென்சிகள் ,உலகெங்கிலும் உள்ள மூத்த அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை, பயனர் மற்றும் தனியார் துறையினர் இதில் பங்கேற்கின்றனர்.

இந்தியாவில் உள்ள சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பலனளிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் புவிசார் பயன்பாடுகளின் நோக்கத்தை விரிவுபடுத்துவதில் மோடி அரசு தொடர்ந்து செயல்பாட்டுப் பங்கை ஆற்றி வருகிறது என்று அமைச்சர் கூறினார்.

கடந்த எட்டு ஆண்டுகளில், குடிமக்களுக்கான அடிப்படை மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதில் இந்தியா பாடுபட்டு வருகிறது. பிரதமர் மோடியின் புதிய இந்தியா தொலைநோக்குப் பார்வையின் கீழ், அனைவருக்கும் குடிதண்ணீர், சுகாதாரம், கல்வி, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளை அரசு கவனித்து வருகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். புவிசார் தகவல் மற்றும் தொழில்நுட்பங்களின் ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் பல பரிமாண நிதி வளர்ச்சி இலக்குகள் மற்றும் நிலையான வளர்ச்சியை விரைவாக எதிர்கொள்ள உதவும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

புவிசார் தொழில்நுட்பம், புவியியல் தகவல்  சிஸ்டம் ஆகியவற்றைப் பின்பற்றி முன்னேறி வரும் விதத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இந்தியா ஏற்படுத்தப் போகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். சில முக்கிய மனிதாபிமான மற்றும் நிலைப்புத்தன்மை பிரச்சனைகளை சமாளிக்க தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது என்றார் அவர்.

“மக்கள்தொகை, சுகாதார வசதிகள் மற்றும் தடுப்பூசி மையங்கள் போன்ற பிற தரவுகளுடன் இணைந்து துல்லியமான, நிகழ்நேர புவிசார் தகவல், கோவிட்-19 தொற்றுநோய் அவசரநிலையை திறம்பட சமாளிக்க நமக்கு  பெரிதும் உதவியுள்ளது ” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் 45 லட்சம் கிமீ கிராமப்புற சாலைகளை வரைபடத்தின் 21 தரவு அடுக்குகளைப் பயன்படுத்தி வரைபடமாக்கியுள்ளது. இது நீர்நிலைகள், பசுமைப் பகுதிகள், நிலங்கள் மற்றும் நிர்வாக நோக்கங்களுக்குத் தேவையான பிற கட்டமைப்புகள் பற்றிய தகவல்களை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். கிட்டத்தட்ட 2.6 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் மேப்பிங் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் அமைச்சகத்தின் கீழ் உள்ளதாக அவர் கூறினார்.  

எம்.பிரபாகரன்

Leave a Reply