தூய்மை இந்தியா 2022 திட்டத்தின் ஒருமாத கால விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தேசிய அளவில் நாளை பிரயாக்ராஜில் தொடங்கி வைக்கிறார்.

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தூய்மை இந்தியா 2022 திட்டத்தின் ஒருமாத கால விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நாளை உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் தொடங்கிவைக்கிறார்.

தூய்மை இந்தியா 2022 திட்டம், நாடு முழுவதும் 744 மாவட்டங்களில் உள்ள சுமார் 6 லட்சம் கிராமங்களில், நேரு யுவகேந்திரா சங்கதன் தொடர்புடைய இளைஞர் சங்கங்கள் மற்றும் தேசிய சேவை திட்டங்கள் தொடர்பான அமைப்புகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா 2022 திட்டத்தின் மூலம் ஒரு கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அப்புறப்படுத்த இளைஞர் நலத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், தனது காணொலி செய்தி மூலமாக,“ தூய்மை இந்தியா திட்டம் 2022 மூலமாக மக்களை திரட்டி அவர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தி, பின்னர் நாடு முழுவதும் தூய்மையை ஏற்படுத்த  அவர்களை பங்குபெற செய்ய வேண்டும் என்பதே நோக்கமாகும்.  இதன் அடிப்படையில், பல்வேறு பகுதிகள், மொழிகள் மற்றும் பின்புலங்களை கொண்ட மக்கள் ஒன்றிணைந்து, கழிவுகளை  அப்புறப்படுத்த  நடவடிக்கைகளை தன்னார்வத்துடன் செயல்படுவார்கள். தூய்மை இந்தியா திட்டம் 2022  என்பது வெறும் ஒரு திட்டமல்ல. தூய்மையை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை மக்கள்  உணர வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி இதுவாகும். இதன் மூலம் நம் நாட்டின் மகிழ்ச்சி குறியீடு உயரும். நாடு முழுவதும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மிகப்பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று இளைஞர் நலத்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது  என்று கூறியுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply