பொருளாதார மற்றும் முதலீட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், சவுதி அரேபியா புறப்பட்டுச் செல்கிறார்.

சவுதி அரேபியாவில் நடைபெறும் பொருளாதார மற்றும் முதலீட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு. பியூஸ் கோயல், 2 நாள் பயணமாக இன்று புறப்படுகிறார்.அவரது பயணத்தின்போது, சவுதி அரேபியாவின் எரிசக்தி துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அசிஸ் பின் சல்மானை சந்தித்து, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.உணவு பாதுகாப்பு, மேற்கத்திய எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம், பசுமை ஹைட்ரஜன் வாயு, மருந்து உற்பத்தி, எரிசக்தி பாதுகாப்பு, கடல்களுக்கு இடையே கட்டமைப்பை உருவாக்குதல் போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

2019ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார்.திரு. பியூஷ்கோயல், சவுதி அரேபிய வர்த்தகத்துறை அமைச்சர் டாக்டர் மஜீத் பின் அப்துல்லா அல் கஸாபி-யை சந்தித்து, பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளார்.

திவாஹர்

Leave a Reply