இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதில், வங்கித்துறை முக்கிய பங்கு வகிக்கும்!- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதில், வங்கித்துறை முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.மும்பையில் நேற்று நடைபெற்ற வங்கிகள் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.உலக அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், வங்கிகள் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இதன்மூலம் அடுத்த 25 ஆண்டுக்கான நமது இலக்கினை எட்ட இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.வங்கி சேவைகளில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply