ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.உஸ்பெகிஸ்தானின் சமர்கந்த் என்ற இடத்தில் நடைபெறும் இந்த மாநாட்டின் ஒருபகுதியாக பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பரஸ்பர நலன்கள் தொடர்பாக பிரதமர் பேச்சுக்கள் நடத்தினார்.

ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களிலும் பிரதமர் பங்கேற்க உள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் திரு. டென்னிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு, ராணுவ தளவாட கொள்முதல் உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்த தலைவர்களுடன் பிரதமர் பேச்சுக்கள் நடத்த உள்ளார்.

ரஷ்ய அதிபர் திரு. விளாடிமிர் புடினுடன் நடைபெற உள்ள பேச்சுக்களின்போது சர்வதேச வடக்கு – தெற்கு போக்குவரத்து முனையம் மற்றும் இருதரப்பு வர்த்தகம், மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகம், ஐ.நா. சபையில் ஒத்துழைப்பு, இந்திய பசிபிக் பகுதியின் நிலைமை உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திவாஹர்

Leave a Reply