தேசிய கூட்டுறவு கொள்கைக்கான மசோதாவை வடிவமைப்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

தேசிய கூட்டுறவு கொள்கைக்கான மசோதாவை வடிவமைப்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மும்பையில் நடைபெற்றுவரும் தேசிய கூட்டுறவு அமைச்சர்கள் மாநாட்டில் இன்று பேசிய அவர், நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு, முழுமையான வளர்ச்சியை உருவாக்கும் நோக்கில், இந்த கொள்கை வடிவமைக்கப்படும் என்று கூறினார்.

மாநில பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.கூட்டுறவு அமைப்புகளில் இலவச உறுப்பினர் பதிவு, தகவல்களை கணினி மயமாக்குதல், தேர்தலை ஜனநாயக முறையில் நடத்துதல், வெளிப்படையான முறையில் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று அமித் ஷா கூறினார்.

நாடு முழுவதிலும் உள்ள 65 ஆயிரம் தொடக்க வேளாண்மை கடனுதவி சங்கங்களின் எண்ணிக்கையை அடுத்த ஐந்தாண்டுகளில் மூன்று லட்சமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply