பழனியில் வைகாசிவிசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இன்று (ஜூன் 06) வைகாசி விசாகத்திருவிழா தொடங்கியது. பழனி கோயிலின் உபகோயிலான பெரியநாயகிஅம்மன் கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகாசி விசாகத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை பழனிதிருக்கோயில் இணைஆணையர் நடராஜன், துணைஆணையர் லட்சுமி ஆகியோர் செய்துவருகின்றனர்.

டி.எஸ்.ஆர்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply