இந்திய மருத்துவத்தைப் பற்றி இழிவாக செய்தி வெளியிட்ட அமெரிக்கச் செய்தி நிறுவனங்கள் மீது, இந்திய அரசு சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்!

Arthur Ochs Sulzberger Jr. Chairman,The New York Times Company.

த நியூயார்க் டைம்ஸ் (The New York Times) என்பது அமெரிக்க ஆங்கில நாளிதழ். இது 1851 ஆம் ஆண்டு முதல், நியூயார்க் நகரில் இருந்து நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வருகிறது. இது அரசியல் பிரமுகரும்பத்திரிகையாளருமான ஹென்றி ஜார்விஸ் ரெய்மண்டு என்பவரால் 1851 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் தொடங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஆர்தர் ஓக்ஸ் சூல்ஸ்பேர்கர், இளையவரின் குடும்ப வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. 1896 ஆம் ஆண்டில் இருந்து இந்நிறுவனத்தை இவர்கள் வகையறா தான் நடத்தி வருகிறார்கள்.

நாளிதழ்களுடன் ”இலவச இணைப்பை” முதன் முதலாக வழங்கத் துவங்கிய தினசரி பத்திரிகை தி நியூயார்க் டைம்ஸ்” தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் இவர்களின் தரத்தை, இந்த நாளிதழுக்கு கீழ் பல்வேறு துணை செய்தி நிறுவனங்கள் உள்ளன. இன்டர்நேஷனல் ஹெரல்ட் டிரிபியூன், தி ஸ்டார் நியூஸ், டைம்ஸ் நியூஸ் போன்ற செய்தி தாள்களும், இவை தவிர அபௌட்.காம், என்ஒய்டைம்ஸ்.காம் போன்ற இணைய தளங்களும் உள்ளன. இது ஒருபுறம் இருக்கட்டும்.

Gary B. Pruitt, President and CEO of the Associated Press.

அசோசியேட்டட் பிரஸ் (Associated Press-AP) என்பது ஒரு அமெரிக்க செய்தி நிறுவனம். அமெரிக்காவின் பல செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதன் கூட்டு உரிமையாளர்களாக உள்ளன. இது ஏ.பி (AP) என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இதன் எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகள், அமெரிக்க மற்றும் பிற நாடுகளின் ஊடகங்களால் வெளியிடப்படுகின்றன. ஏ.பி (AP) இதை ஒரு கட்டணச் சேவையாக செய்து வருகிறது. 2005-ம் ஆண்டு தரவுகளின் படி உலகெங்கும் சுமார் 1,700 செய்தித்தாள்கள், 5,000 அலைவரிசை ஊடகங்கள் ஏ.பி (AP) -யின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். கேரி பி. ப்ரூட், என்ற அமெரிக்கர் தான்,இந்த அசோசியேட்டட் பிரஸ்ஸின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

இவர்கள் நினைத்தால் சாதாரண உப்பு பெறாத உள்ளுர் பிரச்சனைகளைகூட, ஊதிப் பெரிதாக்கி உலக பிரச்சனையாக்கி விடுவார்கள். உலக அளவிலான பெரியப் பிரச்சனைகளைகூட, ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவார்கள். மொத்தத்தில் ‘செய்தி நிறுவனம்’ என்ற போர்வையில் செயல்பட்டு வரும் கூலிக்காக மாரடிக்கும் சர்வதேசக் கும்பல் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களுக்கும் உண்மைக்கும் எள் அளவும் எந்த சம்மந்தமும் இருக்காது. 

இவர்கள் வழங்கும் செய்திகளை நம்பிதான், உலகெங்கும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான அச்சு  மற்றும் காட்சி, அலைவரிசை ஊடகங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றன. பிரேக்கிங் நியூஸ் முதல் புலனாய்வு அறிக்கைகள் வரை அனைத்தும் இவர்கள் கை வண்ணத்தில் உருவானதுதான். 

அவர்கள் வழங்கும் செய்திகளின் உண்மை தன்மை குறித்து, எந்த ஊடகங்களும் எதிர்த்து கேள்வி கேட்பதுமில்லை. அச்செய்திகளின் தரம் குறித்து கள ஆய்வுகளை மேற்கொள்வதுமில்லை. இதுபோன்ற செய்தி நிறுவனகள் வழங்கும் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அச்செய்திகளுக்கு பொறுப்பு ஏற்பதுமில்லை.  செய்தி நிறுவனத்தின் பெயரைப் போட்டே தப்பித்தும் கொள்கின்றன. சரி, இது ஒருபுறம் இருக்கட்டும்.

இப்போது நமது செய்தியின் தலைப்பிற்கு வருவோம்.

இந்த அசோசியேட்டட் பிரஸ் (Associated Press-AP) என்ற அமெரிக்க செய்தி நிறுவனம், 

“சிலர் ஆதாரம் இல்லாமல் வைரஸுக்கு மூலிகை மருத்துவத்திற்குத் திரும்புகிறார்கள்” “Some People Turn to Herbal Medicine for Virus without Proof”– என்ற தலைப்பில், 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, உலக சுகாதார நிறுவனத்தால் World Health Organization (WHO) அங்கீகரிக்கப்பட்ட, நமது இந்திய பாரம்பரியமான சித்த, ஆயுர்வேத மருத்துவத்தைப் பற்றியும், மருந்துகளை பற்றியும் மிகவும் இழிவான ஒரு கட்டுரையை வெளியிட்டனர். இதை த நியூயார்க் டைம்ஸ் (The New York Times) தனது என்ஒய்டைம்ஸ்.காம் nytimes.com-ல் உலகம் முழுக்க வெளிச்சம் போட்டுக்காட்டியது. 

இது எப்படி இருக்கிறது என்றால், ‘யானையை தடவிப் பார்த்து, குருடன் குறிச் சொன்னக் கதையாகதான் இருக்கிறது’. இந்திய மருத்துவத்தைப் பற்றி அமெரிக்கர்களுக்கு என்ன தெரியும்?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்று அமெரிக்கர்கள் அலைகிறார்கள். அதனால்தான் மலேரியா, காசநோய் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆபத்தான மருந்துகளை கொரோனா வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளுக்கும் வழங்குகிறார்கள். அது அவர்கள் விருப்பம், அது அந் நாட்டின் கொள்கை முடிவாகக்கூட இருக்கலாம். அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. அதற்காக, அதை மற்ற நாட்டவரும் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது அபத்தம்.

இந்திய மருத்துவத்தில் எந்த நன்மையும் நடந்துவிடக் கூடாது; இந்தியர்களின் முயற்சி எந்த விதத்திலும் வெற்றி அடைந்துவிடக் கூடாது என்பதில், உலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்கிறது. அவற்றின் வெளிபாடுதான் Associated Press-AP, The New York Times ஆகிய அமெரிக்கச் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட இந்த இழிவான கட்டுரை.

Some People Turn to Herbal Medicine for Virus Without Proof - The New York Times

RejoinderNYT_0

இதற்கு அவர்கள் முகத்தில் அறைந்தார்போல் கண்டனம் தெரிவிக்க வேண்டிய நமது இந்திய அரசு, மயில் தோகையில் வருடியதைப் போல, ஒரு விளக்கத்தை த நியூயார்க் டைம்ஸ் (The New York Times) ஊடகத்திற்கு அனுப்பி வைத்தது. பொய் கட்டுரையை வெளியிட்ட த நியூயார்க் டைம்ஸ் (The New York Times) ஊடகம். சப்தமில்லாமல் அதை தனது nytimes.com இணையத்தில் இருந்து நீக்கிவிட்டது.

இந்த செய்தி-ஏஜென்சி கட்டுரை, இனி nytimes.com -ல் கிடைக்காது (This news-agency article is no longer available on nytimes.com)– என்று அந்த பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

எனவே, நமது இந்திய மருத்துவத்தைப் பற்றி இழிவாக செய்தி வெளியிட்ட Associated Press-AP, The New York Times ஆகிய அமெரிக்கச் செய்தி நிறுவனங்கள் மீது, நமது இந்திய அரசு சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் இதற்கு நஷ்ட ஈடும் கோரலாம்.

நம் நாட்டு மக்களுக்கு எந்த மருந்தை வழங்குவது, எந்த மருத்துவ முறையை பின்பற்றுவது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் எந்த சமரசமும் கூடாது. இதில் எந்த சர்வதேச அழுத்தம் மற்றும் குறுக்கீடுகள் வந்தாலும் அதற்கு இந்திய அரசு அடிபணியக் கூடாது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு Severe Acute Respiratory Syndrome (SARS-CoV2)- COVID-19. அலோபதி (Allopathy) மருத்துவத்தில் மருந்து இல்லை என்றால், வேறு எந்த மருத்துவத்திலும் மருந்து இல்லை என்று சொல்வது அச்சம் (அல்லது) அறியாமையின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

கொரோனா வைரஸ் (SARS-CoV2) தொற்று நோய் தானே தவிர, உயிர்கொல்லி நோய் அல்ல!- என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை கொண்டு குணப்படுத்த முடியவில்லை என்றால், அது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ள குறைப்பாடு ல்ல! அந்த துறைச் சார்ந்த மருத்துவர்கள் மீது உள்ள மிகப் பெரிய குற்றம். அவர்கள் அத்துறையில் அக்கறை செலுத்தவில்லை என்றுதான் அர்த்தம்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சித்தா ஆயுர்வேத மற்றும் ஆயுஷ்  மருத்துவர்கள் உரிய நேரத்தில் முறையாக பணிக்கு வருகிறார்களா? என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். அவசியம் ஏற்பட்டால் பயோமெட்ரிக் முறையில் அவர்களின் வருகையை பதிவு செய்யுங்கள். இந்த பேரிடர் காலத்தில் அவர்களையும் கொரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுப்படுத்துங்கள்.

பாரம்பரிய, அனுபவ மற்றும் பட்டதாரி சித்தா, ஆயுர்வேத மற்றும் ஆயுஷ் மருந்துவர்கள் யாராக இருந்தாலும், வயிற்று பிழைப்பிற்காக ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தித் தொழில் செய்வதை உடனே தடை செய்யுங்கள்.

இன்னும் ஒரு வருட காலத்திற்கு, ஆயுஷ் அமைச்சகத்தையும், ஆயுஷ் அமைச்சக தலைமை மற்றும் உயர் அதிகாரிகளையும், அவர்களது அன்றாட செயல்பாடுகளையும், பாரத பிரதமர் நரேந்திர மோதி, தனது நேரடி கண்காணிப்பில் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இந்திய மருத்துவத்தின் மகத்துவத்தை நாம் உலகம் அறிய செய்ய முடியும்.

பூவுக்குள் மணம் இருப்பதைப் போலவும், விதைக்குள் விருச்சகம் இருப்பதைப் போலவும், இந்திய மருத்துவத்தில் மகத்துவம் நிறைந்திருக்கிறது. இந்த உண்மையும், இரகசியமும் எல்லோருக்கும் புரிய வாய்ப்பில்லை. ஏனென்றால், இதை அறிவினால் உணர்ந்து கொள்வதைவிட, அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
மருத்துவ சுவடிகள் ஆய்வாளர்,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
ullatchithagaval@gmail.com

இதுகுறித்த முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2020/04/23/47388/

 

 

 

One Response

  1. MANIMARAN May 3, 2020 9:04 am

Leave a Reply