சோதனை செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் போர் விமானங்கள்!-தீவிரவாத அரசியல் செய்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி மீது குற்றம் சுமத்தும் ஊடகங்கள்!

ஒருபுறம் அமைதி பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டு நாடகமாடும் பாகிஸ்தான் அரசாங்கம், மறுபுறம் எந்த நேரத்திலும் இந்தியா மீது தாக்குதல் நடத்த தயாராகவே இருந்து வருகிறது. அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகள் இதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

இந்த லட்சணத்தில், தீவிரவாத அரசியல் செய்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி மீது, பாகிஸ்தான் மற்றும் சர்வதேச  ஊடகங்கள்  சில  குற்றம் சுமத்தி வருகிறது.

எது எப்படியோ! பாகிஸ்தான் தீவிரவாதிகள் விசியத்தில் இந்தியா எந்த பாவ புண்ணியமும் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் கூடாரங்கள் முழுமையாக அழிக்கப்படும் வரை, பாகிஸ்தானுடன் எந்த விதமான இராஜ்ஜிய உறவுகளும் இந்தியா வைத்துக் கொள்ளக் கூடாது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு மற்றும் தேர்தல் ஆதாயம் என்ற பேச்சுக்கே எள்ளவும் இடமளிக்கக் கூடாது. இதை இந்திய பிரதமர் நரேந்திர மோதி உடனே உறுதி செய்ய வேண்டும்.

தேசம் முக்கியமா? கட்சி முக்கியமா? என்ற கேள்வி எழும்பட்சத்தில், எனக்கு  தேசம்  தான்  முக்கியம் என்ற பதிலைதான் இந்திய பிரதமரிடமிருந்து ஒட்டு மொத்த  இந்திய மக்களும் எதிர்பார்க்கிறார்கள். நாட்டு மக்களின் நம்பிக்கையை  காப்பாற்ற வேண்டிய  கடமையும், பொறுப்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply