சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தமிழகம் முழுவதும் நடைப்பெற்றது.

திண்டுக்கல்லில் நடைப்பெற்ற சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.

30-வது சாலைப் பாதுகாப்பு வாரம் இன்று தொடங்கி 10-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தமிழகம் முழுவதும் இன்று நடைப்பெற்றது. இதனையொட்டி சேப்பாக்கம் முதல் தீவுத்திடல் வரை ‘சாலைப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு’ என்ற பெயரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதில் காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

30-வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

-அழகுராஜா,  எஸ்.திவ்யா.

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 3 படகுகள், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.
நான் சாவதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் ஒருபோதும் மோதி அரசுக்கு அடிபணியமாட்டேன்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்.

Leave a Reply