விடுதலை சிறுத்தைகளின் தேசம் காப்போம் மாநாடு! திருச்சி பொன்மலை ‘ஜி’ கார்னர் இரயில்வே மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்.

இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் இன்று ( 22.01.2019) மாலை 6 மணிக்கு எடுக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகளின் தேசம் காப்போம் மாநாடு, திருச்சி, பொன்மலை ‘ஜி’ கார்னர் இரயில்வே மைதானத்தில் நாளை (23.01.2019) மாலை 3 மணியளவில் நடைபெற இருக்கிறது. அதற்கான மேடை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாலை 3 மணிக்குள்ளாக மாநாட்டு திடலை அடையும் வகையில் பயணத்திட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.

கட்சி, அணிகள், துணைநிலை அமைப்புகள் மற்றும் பிற மையங்கள் ஆகியவற்றைச் சார்ந்த தோழர்கள் தத்தமது வாகனங்களில் உரிய பெயர்ப் பதாகைகளுடன் வரவேண்டும்.

எக்காரணம் கொண்டும் மேடை ஏறுவதற்கான முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக சால்வைகள், துண்டுகள் மற்றும் மாலைகள் அணிவிக்கவோ, பரிசுகள் மற்றும் நிதி அளிக்கவோ மேடையில் யாருக்கும் அனுமதி இல்லை.

மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் அனைவரும் அவரவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமரவேண்டும்.

மாநாட்டுக்கு வரும் வழிகளில் உள்ள பெட்டிக்கடைகள், தேநீர்க்கடைகள், உணவகங்கள், எரிபொருள் நிலையங்கள் (பெட்ரோல் பங்க்) ஆகியவற்றில் பிரச்சினைகளுக்கு இடம் தராத வகையில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

பயணத்தின் போது பிறர் மனம் புண்படும்படியான வகையில் முழக்கங்களை எழுப்பக்கூடாது.

மாநாட்டுக்கு வரும்பொழுதும், திரும்பும்பொழுதும் விரைந்து பயணிப்பதோ, வாகனங்களை முந்திச் செல்வதோ கூடாது.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர். தொல். திருமாவளவன் தனது தொண்டர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-சி.அருணகிரி.

Leave a Reply