திருவாரூரில் போட்டியிட அதிமுகவினர் ஏராளமானோர் விருப்ப மனு!- வேட்பாளர் யார் என்பது நாளை அறிவிக்கப்படும்.

திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தி.மு.க-வும், அ.ம.மு.க-வும் அறிவித்துவிட்ட நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் ஏராளமானோர் விருப்ப மனு அளித்துள்ளனர். வேட்பாளர்கள் நேர்காணல் முடிவடைந்த நிலையில்,  வேட்பாளர் யார் என்பது நாளை (07.01.2018) காலை 10.30 மணிக்குள் அறிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தெரிவித்துள்ளார்.

எப்படி இருந்தாலும் முதன்முதலில் நாம் ஏற்கனவே நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஊடகத்தில் தெரிவித்துள்ளப்படி,  கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்துவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கும்.

மேலும், தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள் மற்றும் குடியரசு தின முன்னேற்பாடுகள் இவற்றையும், இந்திய தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமைதிக்கான விலையாக கருதி திருவாரூர் தொகுதி உள்பட, தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து, பாராளுமன்றத் தேர்தலுடன் தேர்தல் நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்.

இதற்கிடையில் நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கிலும் முடிவு தெரிந்து விடும். அதற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் புதிய வாக்காளர்கள் பட்டியலும் தயார் ஆகிவிடும்.

அதுவரை இந்திய தேர்தல் ஆணையம் அமைதியாக இருப்பதுதான் அனைவருக்கும் நல்லது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

இது தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும். 

http://www.ullatchithagaval.com/2019/01/01/40005/

 

 

Leave a Reply