மதுரை மாநகரில் 1500 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்!

மதுரை மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் படி மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில், C5 கரிமேடு சட்டம் & ஒழுங்கு சார்பு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது, மதுரை டவுன் பொன்னகரம் பிராட்வே மதுரா கோட்ஸ் பாலத்திற்கு கீழ் பகுதியில்  ASHOK LEYLAND லாரி அருகே இருந்தவர்களை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தபோது, அந்த லாரியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 1) முருகன் 36/18, த/பெ. சந்திரசேகரன், ராஜேந்திரா 3 வது தெரு, கரிமேடு, மதுரை.

2) தங்கப்பாண்டி 38/18, த/பெ. சுப்புராஜ், மேலப்பொன்னகரம் 12 வது தெரு, ஆரப்பாளையம், மதுரை.

3) அருண் 30/18, த/பெ.பால்ராஜ், ராம் நகர், புது ஜெயில் ரோடு, மதுரை.,

4) முத்துகுமார் 27/18, த/பெ கணேசன், மேலப்போன்னகரம் மெயின் ரோடு, ஆரப்பாளையம், மதுரை.

ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து. (1) விமல் பாக்கு – 11 மூடைகள், கணேஷ் புகையிலை – 48 மூடைகளும், ASHOK LEYLAND லாரிஆகியவற்றையும் கைப்பற்றி, நான்கு பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மதுரை மாநகர் முழுவதும் தொடர்ந்து தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.

– எஸ்.திவ்யா.

 

Leave a Reply