வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் லாரிகள் மூலம் குடிதண்ணீர் விநியோகம்! குடிநீர்கிணறுகளை சுத்தம் செய்யும் பணியில் இலங்கை கடற்படை ஊழியர்கள் தீவிரம்.

இலங்கையில் தொடர்ந்து பெய்த கனமழைக் காரணமாக, வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர்.

தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து டிசம்பர் 26 –தேதி ஆதாரப்பூர்வமாக நமது “உள்ளாட்சித் தகவல்” ஊடகத்தில் ‘த(க)ண்ணீரில் தத்தளிக்கும் இலங்கை வடக்கு மாகாணம்!’- என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இலங்கை கடற்படை ஊழியர்கள் லாரிகள் மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர். மேலும், வெள்ளப்பெருக்கால் அசுத்தமடைந்த குடிநீர்கிணறுகளை சுத்தம் செய்யும் பணியிலும் இலங்கை கடற்படை ஊழியர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

– என்.வசந்தராகவன்.

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைப்பெற்றது.
பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி துவக்கி வைத்தார்.

Leave a Reply