புறம்போக்கு பகுதியில் குடியிருக்கும் 14 ஆயிரம் பேருக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் : சிறப்பு மனுநீதி முகாமில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு. இராசாமணி தகவல்.

திருச்சி மாவட்டத்தில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு பகுதியில் குடியிருக்கும் 14 ஆயிரம் பேருக்கு விரைவில் பட்டா வழங்கப்பட உள்ளதாக திருவெறும்பூர் அருகே உள்ள தேனீர்பட்டியில் நடந்த சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு. இராசாமணி தெரிவித்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு. இராசாமணி தலைமையில் 26.12.2018 அன்று நடைபெற்ற மானுநீதி நாளில் வேளாண்துறை சுகாதாரதுறை, தோட்டகளைத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிட்டதோடு வருவாய்த்துறை சார்பில் 112 நபருக்கும், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 487 நபருக்கும், ரூ5,67,020.00 மதிப்பிலும், மின்னனு குடும்ப அட்டை 324 குடும்பத்திற்கும், ஊரக வளாச்சிதுத்துறை,  வேளாண்துறை சார்ந்த பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.  அப்போது புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பதற்கு ஆட்சபனை தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படுமென கூறினார்.

100 சதவிதம் கல்வியை விரிவுப்படுத்துவதோடு பள்ளி கல்வியையாவது அவர்கள் முடிக்கவேண்டும் என்பதற்காக விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. அதுபோல் இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் 47 ஆயிரத்து 208 மாணாக்கர்களுக்கு சைக்கிள் வழங்கவேண்டும். தற்போது வரை 15 ஆயிரம் மாணாக்கர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும், மீதம் உள்ளவர்களுக்கு வரும் பொங்கல் பண்டிகைக்குள் வழங்கப்படும்.

அதேபோல் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் இரண்டு சக்கர வாகனம் திருச்சி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட  3 ஆயிரத்து 922 பயனாளிகளில் ,  தற்போது வரை 2ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரக மற்றும் நகர்புறங்களில் திருச்சி மாவட்டத்தில் 10 ஆயிரம் மகளிர் சுய உதவிகுழுக்கள் உள்ளது. அதில் தேனீர்பட்டியில் 30 குழுக்கள் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 242 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது. தேனீர்பட்டியில் உள்ள 30 குழுக்களுக்கு ரூ.70 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை மூலம் கடந்த ஆண்டு ரூ.276 கோடி கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.200 முதல் ரூ.210 கோடி வரையில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.317 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.195 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊரக வளாச்சித்துறை மூலம் 5 ஆயிரத்து 80 பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பசுமை வீடுகள் இந்த ஆண்டு 813 பயனாளிக்கு ரூ. 2லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித்தரப்படுவதாக கூறினார்.

தற்போது பட்டா, வீடு இல்லாதவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளும் பயனாளி பங்களிப்பில் மாடிக்குடியிருப்பில் வீடு கட்டித்தரப்படுமென்றும் தற்போது லால்குடி அருகே உள்ள இருங்கலூர் மற்றும் நாகமங்கலம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் கூறினார்.மேலும் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் 400 குடும்பங்களுக்கு 1.4 கோடி மதிப்பில் கறவைமாடுகளும், ரூ.7.44 கோடி மதிப்பீட்டில் 23 ஆயிரம் ஆடுகளும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்தப்பகுதி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் சமுதாய கூடம் கட்டுவதற்கு பரிசீலனை செய்யப்படும். தேனீர் பட்டியில் மின்சாரம்  15 முதல் 20 நாட்களில் சரிசெய்யப்படும். பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்திற்கு இடவசதி இருந்தால் கூடுதல் கட்டிடம் கட்டி தரப்படும், நேரடிநெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கு தேவையான பகுதியில் தொடங்கப்படும். மேலும் பழங்கனாங்குடி ஊராட்சி பண்டாரகுளம் முதல் பழந்தின்னி குளம் வரை சாலை வசதி கோரியதில், ஊரக வளர்ச்சி துறை பொறியாளர்கள் அதற்கு ரூ. 40 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனர். அந்த சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .

பழங்கனாங்குடியில் ரேசன்கடை கட்டிடம் இல்லாமல் உரக்கிடங்கில் செயல்படுவதாக கூறி உள்ளனர். அதற்கு புதிய கடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும், ஆரம்ப சுகாதாரநிலையம் தேனீர் பட்டி அருகே உள்ள அசூரில் தொடங்கப்படும். இந்தப்பகுதியை ஆய்வு செய்து போக்குவரத்திற்கு தேவையான பேருந்து வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  வேளாண்துறை இணை இயக்குநர் பால்ராஜ், திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார், துணைகலெக்டர் பழனிதேவி உள்ளிட்ட பல்வேறு துறைஅதிகாரிகள் தங்கள் துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறினார்கள்.

இந்த விழாவில் பலத்துறை அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர் முன்னதாக திருச்சி கோட்டாட்சியர் அன்பழகன் வரவேற்றார். திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

– ஆர்.சிராஜுதீன்.

 

Leave a Reply