இலங்கை வடக்கு மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு!-மீட்பு பணி தீவிரம்.

இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழைக் காரணமாக, வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களையும் மற்றும் கால்நடைகளையும் மீட்கும் பணியில் தற்போது கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை, இலங்கை கடற்படை ஊழியர்களின் குழு, பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தியதின் மூலமாக, புதுச்சேரி அரசுக்கு முதலமைச்சர் நாராயணசாமி பெருமை சேர்த்துள்ளார்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்!-வானிலை முன்னறிவிப்பு.

Leave a Reply