சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு விரைவில் நிவாரண உதவி கிடைக்க குறைதீர்க்கும் சிறப்பு முகாம்!

மதுரை மாநகர காவல்துறை சார்பாக சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம், இன்று (21.12.2018) காலை மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் திருமண மண்டபத்தில் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில், மதுரை மாநகரில் விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்கள் சுமார் 200- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நிவாரண உதவி விரைவில் கிடைப்பதற்கு காவல் துறையிடமிருந்து காயச்சான்றிதழ், பிரேதபரிசோதனை அறிக்கை, வாகனச்சான்றிதழ் தேவைப்படுவோருக்கு உடனடியாக வழங்கும்படி அனைத்து காவல்நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

மேலும், இதர துறைகளிடமிருந்து நிவாரண உதவி பெறுவதற்கு ஏதேனும் ஆவணங்கள் தேவைப்பட்டால் உடனடியாக அவற்றையும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் பேசி ஆவணங்களை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார். இந்த சிறப்பு முகாமின் முக்கிய நோக்கம் வாரிசுதாரர்கள் விரைவில் நிவாரண உதவி பெறுவதற்கு போதிய ஏற்பாடுகள் செய்வதேயாகும்.

இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் போக்குவரத்து அருண் பாலகோபாலன், காவல் துணை ஆணையர் ஆயுதப்படை முருகேசன், காவல்உதவி ஆணையர் நகர் போக்குவரத்து ஜோசப்நிக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-பா.சிவபாக்கியம்.

Leave a Reply