மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா!-வீடியோ.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா, இன்று சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது. கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலையை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.

இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன், பாண்டிச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் திமுக தோழமைக் கட்சித் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகத்தை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

-க.மதியழகன், ஆர்.அனுசுயா.

Leave a Reply