மேற்கு ஆசியாவில் மாறிவரும் சூழ்நிலைகள் தொடர்பாக, இன்று (18.06.2026) புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதைகள் அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று எரிபொருள் இருப்பு, கடல்சார் செயல்பாடுகள், அப்பகுதியில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் உதவிகள், முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விவரித்தனர்.
பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு (எல்பிஜி) ஆகியவற்றின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெய் கையிருப்புடன் உயர் திறனில் இயங்கி வருகின்றன, அதேவேளையில் போதுமான பெட்ரோல், டீசல் கையிருப்பும் பராமரிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டுப் பயன்பாட்டை கருத்தில்கொண்டு, சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. மத்திய கிழக்கு நெருக்கடியின் விளைவாக கச்சா எண்ணெய் விலையில் அசாதாரண உயர்வு ஏற்பட்டுள்ள போதும் பாதிப்பிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 10 குறைப்பதன் மூலம், இந்தச் சுமையின் ஒரு பகுதியைத் தானே ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.
டி-பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி-போக்குவரத்துக்கான 100% விநியோகத்தில் பயன்பாட்டாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி-யிலிருந்து பிஎன்ஜி-க்கு நீண்ட கால மாற்றத்திற்கு உதவினால், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் 18.03.2026 தேதியிட்ட கடிதம் மூலம் கூடுதலாக 10% வணிக எல்பிஜி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன்படி கூடுதல் வணிக எல்பிஜி ஒதுக்கீட்டை 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பெற்று வருகின்றன.
வீட்டு உபயோக எல்பிஜி விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி விநியோகஸ்தர்களிடம் எந்தவித தட்டுப்பாடும் பதிவாகவில்லை. தொழில்துறை அடிப்படையில் ஆன்லைன் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவுகள் நேற்று (17.06.2026) 99% அளவுக்கு அதிகரித்துள்ளன. விநியோகஸ்தர் நிலையில் வேறுவகைக்கு திருப்பப்படுவதைத் தடுப்பதற்காக, விநியோக அங்கீகாரக் குறியீடு அடிப்படையிலான விநியோகம் சுமார் 96% அதிகரித்துள்ளது. நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண்ணுக்கு விநியோக அங்கீகாரக் குறியீடு அனுப்பப்படுகிறது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், பாரசீக வளைகுடாவில் நிலவும் கடல்சார் சூழல் குறித்த சமீபத்திய தகவல்களை வழங்கியதுடன், அப்பகுதியில் உள்ள இந்தியக் கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் விவரித்துள்ளது. அதில் கூறப்பட்டதாவது:
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதைகள் அமைச்சகம், பாரசீக வளைகுடாவில் நிலவும் கடல்சார் சூழல் குறித்த சமீபத்திய தகவல்களை வழங்கியதுடன், அப்பகுதியில் உள்ள இந்தியக் கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் விவரித்தது. இந்தியாவின் தஹேஜ் நகருக்கு சுமார் 62,370 மெட்ரிக் டன் எல்என்ஜி சரக்கை ஏற்றி வநத மால்டா கொடியிடப்பட்ட கப்பலான திஷா,2026 ஜூன் 15 அன்று ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்தது. இக்கப்பல் 2026 ஜூன் 19 அன்று தஹேஜ் துறைமுகத்தில் நங்கூரமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
