தமிழ்நாட்டில் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 18 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
மரபுப்படி, புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
புதிய நிதியமைச்சர் மரிய வில்சன் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இக்கூட்டத்தொடரில் தாக்கல் செய்வார்.
வழக்கமாக காலை 9.30 மணிக்கு தொடங்கும் சட்டப்பேரவை, ஜூன் 18 வியாழக்கிழமை அன்று மட்டும் காலை 10.00 மணிக்கு கூடுகிறது.
பட்ஜெட் உரை தொடங்குவதற்கு முன்பாகவே விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மீது பல்வேறு அபாண்டமானக் குற்றச்சாட்டுகளை அக்கினி வார்த்தைகளால் அபிஷேகம் செய்துவிட்டு… எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் பட்ஜெட் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ய இருக்கிறார்கள்.
எனவே, தவெக சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர் பெருமக்களும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக செயல்பட்டு, அமைதி காத்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபையும், மாண்பையும், கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டும்.
எதிரி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் இறையாண்மையையும், இரக்கத்தையும் எதிர்பார்க்க இயலாது. அவர்களின் அபாண்டமானக் குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடும், அதற்கான உரிய தரவுகளோடும், அறிவுபூர்வமாக எதிர்கொள்ள ஆளுங்கட்சி தயாராக இருக்க வேண்டும்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA TEAM
