நாடாளுமன்ற செயலகத்தின், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் நடத்தும் வளர்ச்சியடைந்த இந்தியா இளையோர் நாடாளுமன்றம் 2026 நிகழ்வை மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று தொடங்கி வைத்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த இளையோரிடையே உரையாற்றிய திரு ஓம் பிர்லா, இந்தியாவின் மிகச் சிறந்த ஜனநாயக பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டபத்தில் அவர்கள் நின்று கொண்டிருப்பதை நினைவுகூர்ந்தார். இந்திய அரசியலமைப்பை உலகின் மிகப்பெரிய, மக்கள் அனைவருக்குமான வழிகாட்டக் கூடிய ஆவணம் என்று குறிப்பிட்ட அவர், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உத்திகளை வகுக்கும் போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திலிருந்து இளைஞர்கள் உத்வேகம் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் இளைஞர்களை ஆக்கப்பூர்வமான நாட்டின் கட்டமைப்பையொட்டி வழிநடத்தும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சகத்தை பாராட்டுவதாகத் தெரிவித்தார். இந்த நிகழ்வு ஜனநாயக மாண்புகள், ஆரோக்கியமான விவாதங்கள், தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் முக்கிய தளமாக செயல்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
திவாஹர்
