கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்கு 2-வது கட்டமாக ரூ.353.70 கோடிபேரிடர் நிதி!-மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்.

தமிழ்நாட்டில் கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு ரூ.15000 கோடி நிவாரண நிதி வழங்கவேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்து, தமிழக முதலமைச்சர் கே..பழனிச்சாமி கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், முதல் கட்டமாக மின் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.200 கோடியை மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில் 2-வது கட்டமாக ரூ.353.70 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழகத்திற்கு மேலும் தேவைப்படும் நிதி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

காவலர்களின் மன அழுத்தத்தை போக்க நிறைவாழ்வு (well being) பயிற்சி!
சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க தடை!-ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமனம்!-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

Leave a Reply