நிவாரண பொருட்களை தடையில்லாமல் கொண்டு செல்ல வழிகாட்டும் அதிகாரிகள் !

 

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் போது வழியில் யாரும் வழி மறித்து தொந்தரவு செய்யாமல் இருக்கவும், நிவாரண பொருட்கள் அனைத்தும் உண்மையிலுமே பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தடையில்லாமல் கொண்டு செல்ல காவல்துறையினரின் பாதுகாப்புடன் அதிகாரிகள் அனுப்பி வைக்கின்றனர்.

அந்த வகையில் நாகப்பட்டிணம் மாவட்டம், கீழையூர் வட்டம், வண்டல் ஊராட்சியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 350 குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அத்யாவசிய பொருட்களை கொண்டு போய், அங்கேயே சமைத்து, இவ்வளவு காலம் தங்கள் உழைப்பின் மூலம் உலகத்திற்கே உணவு அளித்த அந்த மக்களுக்கு, எங்கள் கைகளால் உணவு வழங்கினோம்.

அப்பகுதி மக்களும், மாவட்ட நிர்வாகமும் எங்களுக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply