கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கிய, தேசிய தொழில் நுட்ப கல்லூரி மாணவர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகாமையில் உள்ள வெட்டன்விடுதி மற்றும் சூரக்காடு பகுதியை சேர்த்த 400 குடும்பங்களுக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் அந்த பகுதி இளைஞர்கள் உதவியோடு அனைவருக்கும் நிவாரண பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக, வீடு வீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

பொது இடத்தில் வைத்து விநியோகம் செய்தால் முந்திக்கொள்பவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். வயது முதிந்த தம்பதியினர் மற்றும் ஊரின் ஒதுக்குபுறமாக இருப்பவர்களுக்கு கிடைக்காது என்பதை உணர்ந்தோம். அதனால் நிவாரண பொருட்களை பையில் வைத்து வீடு வீடாக சென்று கொடுக்க முடிவு செய்தோம்.

அதனால் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை தொடர்புகொண்டு கள நிலவரத்தை அறிந்து கொண்டு ஊர் இளைஞர்களின் உதவியோடு, வெவ்வேறு குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு வீடாக சென்று பொருட்களை வழங்கினோம். சற்று சிரமமாக இருந்தாலும், நாங்கள் வாங்கிய அனைத்து பொருட்களும் சரியாக மக்களை சென்றடைந்தது.

மேலும், பட்டுக்கோட்டை அருகாமையில் உள்ள கிராமத்திற்கு 200 பேட்டரி லைட் இன்று அனுப்புகிறோம். அடுத்த கட்ட நிவாரண பொருட்கள் சுமார் 500 குடும்பங்களுக்கு உதவ நாளை காலை புறப்படுகிறோம் என்றார்கள் மாணவர்கள்.

திருச்சி தேசிய தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களின் இத்தகைய சேவையை நினைக்கும்போது, 

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

-என்ற வள்ளுவ பெருந்தகையின் வார்த்தைகள்தான் நம் நினைவுக்கு வருகிறது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply