நர்மதை ஆற்றின் நடுவில் 2,300 கோடி ரூபாய் செலவில் 597 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு சுதந்திரம் பெற்றபின், 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல், ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என அழைக்கப்படுகிறார்.

நரேந்திர மோதி குஜராத் முதல்வராக இருந்தபோது, நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க 2013-ல் திட்டமிடப்பட்டது.

2,300 கோடி ரூபாய் செலவில் சிலை அமைக்கும் பணிகள் முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று, அவரது சிலையை, பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

 -எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply