உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகள் சார்பில், “உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி” நடைப்பெற்றது.

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி உலக பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதுபோல் இந்த ஆண்டும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஓரு பகுதியாக திருவெறும்பூர் அருகே காட்டூரில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி என்.சி.சி மற்றும் பள்ளி மாணவிகள் சார்பில் இன்று நடைப்பெற்ற உலக பெண் குழந்தைகள் தின விழிப்பணர்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியானது பள்ளியில் தொடங்கி காட்டூர் பாப்பாகுறிச்சி சாலை வரை, திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வந்து, மீண்டும் பள்ளிக்கு வந்து சேர்ந்தது.

பேரணியில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் பற்றிய விழிப்பணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

-ஆர்.சிராசுதீன்.

சவுதி அரேபிய அமைச்சக மருத்துவமனைகளில் பணிபுரிய மருத்துவர்கள் தேவை.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்யும் இலங்கை கடற்படையினர்!

Leave a Reply