திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரியில் நேற்று மாணவர்களை காட்டுமிராண்டி தனமாக தாக்கியதை கண்டித்தும், கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தமிழகம் முழுவதும் வழங்க கோரியும், திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், இன்று காலை 10 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், சாலை மறியலில் ஈடுப்பட்ட சுமார் 75 மாணவர்கள் கைது செய்யபட்டு, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இதனால் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-ஆர்.சிராசுதீன்.

திருச்சி திருவெறும்பூர் அருகே மணல் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி!
நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்பட 35 பேர் மீது வழக்கு பதிவு! கைதுக்கும் - விடுதலைக்கும் காரணம் என்ன?-முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.

Leave a Reply