மணல் திருட்டை தடுக்க உயிரை பணையம் வைத்து இரவு நேரங்களில் சுற்றித் திரியும் திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை!

இன்று (27.09.2018) நள்ளிரவு 12 மணி, திருச்சி-கல்லணை சாலை, காவிரி ஆற்றின் வலது கரை, கீழமுல்லக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டக்குடி கிராமம் அரசமரத்தடிக்கு கிழக்கே சுமார் 20 மீட்டர் தூரத்தில் வேட்டி, சட்டை அணிந்து கொண்டு, கையில் ஒரு தடிக்குச்சியுடன் ஒரு உருவம், அதை கடந்து கொஞ்ச தூரம் சென்ற நாம், திரும்பி வந்து உற்றுப் பார்த்தபோது, திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை தன்னந்தனியாக நின்றுக்கொண்டிருந்தார். ஆற்று ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை பாண்டி என்ற வருவாய் பணியாளர் காவிரி ஆற்றுக்குள் கொட்டிக்கொண்டிருந்தார். 

திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரையை கண்டதும் மணல் திருடியவர்கள் அனைவரும் காவிரி ஆற்றுக்குள் குதித்து தப்பிச் சென்றனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கிளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழவிளாங்குளம் மற்றும் அண்ணாநகர், வேங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூசைப்படித்துறை, பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சர்க்கார்பாளையம், சிவன்கோவில், கீழமுல்லக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டக்குடி, காந்திபுரம், புத்தாபுரம் பகுதிகளில் காவிரி ஆற்றிலிருந்து அரசு அனுமதியில்லாமல் மணல் எடுத்து, அதை கரையில் கொண்டு வந்து கொட்டி, சாக்கு மூட்டைகளில் கட்டி, அங்கிருந்து இருசக்கர வாகனங்கள் மூலம் கொண்டு சென்று, ஒரு இடத்தில் மொத்தமாக பதுக்கி வைத்து அதன் பிறகு வேன் மற்றும் லாரிகளின் மூலம் வெளி இடங்களுக்கு அதிக விலைக்கு மணலை விற்று வருகிறார்கள்.

இந்த மணல் திருட்டை தடுப்பதற்ககாகதான் இரவு நேரங்களில் உயிரை பணையம் வைத்து திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை தினந்தோறும் மாறுவேடத்தில் சுற்றித் திரிகிறார்.

மணல் திருட்டை தடுப்பதற்கு முக்கிய கடமையாற்ற வேண்டிய திருவெறும்பூர் காவல் துறையினர், மணல் திருடர்களிடம் தொடர்ந்து மாமுல் வாங்கிக்கொண்டு மௌனமாக இருந்து வருகின்றனர்.

மணல் கடத்தலுக்கு எதிராக திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை முயற்சியால் இதுவரை எடுக்கபட்ட நடவடிக்கை விபரங்களை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

-கே.பி.சுகுமார், ஆர்.சிராசுதீன்.

 

One Response

  1. kumar September 27, 2018 8:15 pm

Leave a Reply