திருச்சி தேசியக்கல்லூரியில் பாலின சங்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


திருச்சி தேசியக்கல்லூரியில்  பாலின சங்க கூட்டம் இன்று (11.08.2018) நடைபெற்றது. பாலின சங்கம் ஒருங்கிணைப்பாளரான கல்லூரி துணை முதல்வர் முனைவர். P.S.S.அகிலாஸ்ரீ, வரவேற்பு ரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர். சு.சுந்தரராமன் அவர்கள் இந்நிகழ்ச்சியின் வாழ்த்துரையை வழங்கினார்.

நிகழ்ச்சியில், பெண்களின் சுகாதாரம், தன்னம்பிக்கை மற்றும் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுதல் என்னும் தலைப்புகளில் A.சுதா, B.E., MS(UK) சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், “சுகாதாரம்” என்பது நலம் மற்றும் நலமான வாழ்வை கருத்தில் கொண்டு ஒரு சமூகத்தால் பேணப்படும் மிக நல்ல பழக்க வழக்கங்களில் ஒன்றாகும் என்றும், தற்கால மருத்துவ அறிவியலில் வெவ்வேறு நோய்நிலைகளுக்கு குறிப்பிட்ட சுகாதார சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் சுகாதாரம் குறித்த வரையறை வெவ்வேறு சமூக பண்பாடு, பாலினம் மற்றும் முதுமைக் குழுக்களால் மாறுபடுகின்றது என்றும், மேலும் “தன்னம்பிக்கை” என்பது தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது மட்டுமல்லாமல் பயம், தோல்வி, முயற்சியின்மை, மன அழுத்தம், துயரம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து மீண்டு வாழ்வில் வெற்றி பெற அவருக்கு தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் சிறந்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்று கூறி தனது உரையை இனிதே நிறைவு செய்தார்.

விழாவின் நன்றியுரையானது இளநிலை கணினி அறிவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி மு.சுபஸ்ரீ வழங்கினார். விழாவானது செயலாளர் திரு. கே. ரகுநாதன் அவர்களது ஆசியுடன் இனிதே நிறைவுற்றது.

– கே.பி.சுகுமார்.

Leave a Reply