பூலாங்கடி காலனியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை!- திருச்சி, நவல்பட்டு காவல் நிலைய போலிசார் விசாரணை.


திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்கடி காலனி, பாரத் நகரை சேர்ந்தவர் ரவி, இவரது மனைவி சித்ரா(வயது 42), இவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு, திருச்சி கே.கே.நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தப்போது, வீட்டின் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 பவன் நகை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்ததின் அடிப்படையில், நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

மாணவ, மாணவிகளின் நலன் கருதி நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் சார்பில் குளித்தலையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
சென்னையில் முகாமிட்டுள்ள அமித்ஷா!- தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் விரைவில் மாற்றம்.

Leave a Reply