40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த வீட்டை இடித்த அதிகாரிகள், கதறிய குடும்பத்தினர், கல்லாக மாறிய வீட்டு வசதி வாரிய நிர்வாக அதிகாரிகள்!

சேலம் மாவட்டம், ஏற்காடு போட்டுக்காடு கிராமத்தில், பகோடா பாயின்ட் எனும் இடத்தில் உள்ள வியூ பாயின்ட் அருகில் வீட்டு வசதி வாரியத்திற்கு என 1994 – ம் ஆண்டு தமிழக அரசு 17 ஏக்கர் நிலத்தை  ஒதுக்கியது. அரசு ஒதுக்கிய நிலத்தில் 17 ஏக்கர் நிலத்தில் வீட்டு வசதி வாரியத்தினர் 7 ஏக்கரில் 1994 -ம் ஆண்டு 67 குடியிருப்புகளை கட்டினர். மீதமுள்ள நிலத்தின் ஒரு பகுதியில் கூலித்தொழிலாளியான முருகேசன்(45) என்பவர் தனது மனைவி செல்வி, குழந்தைகளான மோகன், சீதா, ராதிகா மற்றும் தேவி ஆகியோருடன் 40 ஆண்டுகளுக்கு மேலான வாழ்ந்து வருகிறார். முருகேசன் அங்கிருந்த மலைபகுதியை சமன் செய்து அங்கு சிறிய அளவிலான வீடுகட்டி விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக பொறியாளர் வடிவேல் தலைமையில் வாரியத்தின் ஊழியர்கள், வருவாய் துறையினர் ஆகியோர் முருகேசன் வீட்டு வசதி வாரியத்தின் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறி, வீடுகளை இடித்து, ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தினர். அப்போது முருகேசனின் குடும்பத்தினர் கதறி அழுதது, அங்கு வந்த அதிகாரிகளிடமே சோகத்தை ஏற்படுத்தியது.

கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் என்பதால் வீட்டுவசதி வாரியத்திற்கே இதுவரை பட்டா வழங்கப்படாமல் உள்ள நிலையில், வீட்டு வசதி வாரியத்தினர் இந்த வீட்டை இடித்தது முருகேசன் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.

-நவீன் குமார்.

Leave a Reply