திருவெறும்பூர் இரயில் நிலைய சாலை விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!- இடத்தை காலி செய்து தருமாறு இரயில்வே நிர்வாகம் நோட்டீஸ்.

திருச்சி, திருவெறும்பூர் இரயில் நிலையம் செல்லும் சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு திருச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், திருவெறும்பூர் தாசில்தார் தலைமையில், கிராம நிர்வாக அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் மூலம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுவருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெறும்பூர் இரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள திடீர் நகர், பர்மா காலனி, காவேரி நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2,500 பேர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரயில்வே நிர்வாகம் சார்பில் இந்த நிலம் இரயில்வேவிற்கு சொந்தமான இடம் என்றும், எனவே இடத்தை காலி செய்து தருமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று அப்பகுதிக்கு சென்று பொதுமக்களை சந்தித்தார்.

இதுகுறித்து மத்திய இரயில்வே துறை அமைச்சரிடம் பேசுவதாகவும், மாவட்ட நிர்வாகத்திடம் பேசி பிரச்சனைக்கு சுமுக தீர்வு காணப்படும் என்றார்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply