கடலில் தத்தளித்த இரண்டு மீனவர்களை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

இலங்கை திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 198 கடல் மைல் தூரத்தில், மீன்பிடித்து கொண்டிருந்த படகு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நிலைத்தடுமாறியது. இதனால் அந்த படகில் இருந்த இரண்டு மீனவர்கள் கடலில் தத்தளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இலங்கை வடக்கு கடற்படையினர், கடலில் தத்தளித்து கொண்டிருந்த இரண்டு மீனவர்களையும், நிலைத்தடுமாறி மூழ்கும் தருவாயில் இருந்த படகையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

-என்.வசந்த ராகவன்.

ஒரு ஓட்டுநரின் அவசரப் புத்தியால் மூன்று லாரிகள் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள்!
பஞ்சப் பூதங்களின் பாதையில் நடக்கும் பிரதமர் நரேந்திர மோதி!-வீடியோ.

Leave a Reply