சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மூன்று நாட்கள் ஜமாபந்தி முகாம் நடைப்பெற்றது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த மூன்றுநாட்களாக நடைபெற்ற ஜமாபந்தி முகாம் இன்றுடன் நிறைவுபெற்றது. முகாமில் ஏற்காடு டவுன், வெள்ளக்கடை, புத்தூர் ஆகிய 3 தரப்புகளின் 67 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஜாதி சான்று, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்களை அளித்திருந்தனர்.

ஏற்காட்டில் நடைப்பெற்ற ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை சான்றிதழை சேலம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் குமரேஸ்வரன் வழங்கும் காட்சி.

முகாமின் நிறைவு நாளான நேற்று சேலம்ம மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் குமரேஸ்வரன் கலந்து கொண்ட  பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இம்முகாமில் மொத்தமாக 98 மனுக்கள் பெறப்பட்டு 63 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 32 மனுக்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்காடு வட்டாட்சியர் சுமதி தெரிவித்தார். இதில் ஏற்காடு தாலுக்காவிற்குட்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

– நவீன் குமார்.

தமிழ் வளர்ச்சித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் எழுப்பியுள்ள கேள்விகள் விபரம்.
சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் & செவிலியர்களாக பணியாற்ற அரிய வாய்ப்பு.

Leave a Reply