திருச்சி மணிகண்டம் அருகே இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் காவலர் பலி!

காவலர் ஜான்ஸன் அலெக்ஸ்.

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஜான்ஸன் அலெக்ஸ் (பணி எண்:891) என்பவர், 11.06.2018 இரவு 11.40 மணியளவில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் வெங்கடேஸ்வரா ரைஸ் மில் அருகில் பஜாஜ் டிஸ்கவர் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையின் நடு கட்டையில் மோதியதில், காவலர் ஜான்ஸன் அலெக்ஸ் படுகாயமடைந்தார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுக்குறித்து மணிகண்டம் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் நலமாக இருக்கிறார்!-ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தகவல்.
பெ.மணியரசன் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

One Response

  1. kumar June 12, 2018 7:48 pm

Leave a Reply