பழுதடைந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம்! பயத்தில் நடமாடும் பொதுமக்கள்!-திருச்சி மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா?

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கீழபுலிவர் ரோடு, கதவு எண்: 56, மதுரம் மைதானம் எதிரில் துளசிராமன் என்பவருக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான வீடு ஒன்று இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த கட்டிடத்தின் சுவர் பகுதிகளில் சிமெண்ட் பூச்சுகள் அரிக்கப்பட்டு, கட்டிடத்தில் விரிசல்கள் விழுந்துள்ளது.

கூரையின் மேற்பகுதி கரையான்களால் அரிக்கப்பட்டு வலுவிழந்து உள்ளது. எந்த நேரத்திலும் இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

கட்டிடத்தின் உரிமையாளர் வெளியூரில் இருப்பதால் இந்த வீடு பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது.

ஆனால், இந்த கட்டிடத்தின் ஒட்டி பொது பாதை உள்ளது. இந்த சந்தின் வழியாகதான் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சென்று வருகின்றனர். முதியோர்களும், பள்ளி குழந்தைகளும் இந்த வழியாக செல்வதற்கே அஞ்சுகின்றனர்.

இந்த கட்டிடத்தின் நிலைமை குறித்து, வீட்டின் உரிமையாளரிடம் பலமுறை அலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, திருச்சி மாநகராட்சி நிர்வாகம் வல்லுநர் குழுவை நேரில் அனுப்பி, இந்த கட்டிடத்தை பார்வையிட்டு, இந்த கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, போர்கால அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply