சிதிலமடைந்த பூங்காவை சீரமைக்குமா மாவட்ட நிர்வாகம்…?

2005 – ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியராக  பி. ஏகாம்பரம் அவர்கள் பணியாற்றிய போது திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முழு சுகாதார இயக்கம் சார்பாக 04.04.2005 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதார பூங்கா நிறுவப்பட்டது. அப்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதியுடன் பூங்கா இளைப்பாறுவதற்காக நிறுவப்பட்டது, ஆனால் தற்போது அந்த பூங்கா சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் தற்பொழுது இளைப்பாற இடமில்லாமலும்> கழிப்பறை இட வசதி இல்லாமலும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு எதிரில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இடத்தில்தான் பொது மக்கள் அனைவரும்  இளைப்பாறும் நிலை உள்ளது.

இதை பற்றி சமூக ஆர்வலர் செந்தில் கூறும்போது,  மாவட்ட நிர்வாகம் அந்த சிதிலமடைந்த சுகாதார பூங்காவை சீரமைத்து சரியான முறையில் பராமரித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரக்கூடிய அணைத்து தரப்பு மக்களும் பயன் பெரும் வகையில் குடிநீர் வசதி மற்றும் இளைப்பாறும்  இட வசதி, கழிவறை வசதி செய்து தந்தால் நல்லது என்பதே பொது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. நிறைவேற்றுமா மாவட்ட நிர்வாகம் ? என கூறினார்.

ஜி. ரவிச்சந்திரன்,

 

Leave a Reply