சேலம் ஏற்காட்டில் மூடிக்கிடக்கும் கால்நடை மருத்துவமனை, உயர் அதிகாரி அமைச்சர் சரோஜாவின் மருமகன் என ஊழியர் மிரட்டல்!

சேலம் மாவட்டம், ஏற்காடு ஜெரீனக்காடு பகுதியை சேர்ந்த பாலு என்பவர் நேற்று தங்கள் நாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் ஏற்காடு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் அங்கு மருத்துவமனை ஊழியர்கள் யாருமின்றி பூட்டப்பட்டிருந்தது. பாலு தனது நாயுடன் அங்கேயே காத்திருந்தார்.

நாயுடன் காத்திருக்கும் மக்கள்.

10.40க்கு மருத்துவமனைக்கு கால்நடை ஆய்வாளர் ஒருவர் வந்தார். அவரிடம் மருத்துவர் எப்போது வருவார் என கேட்டபோது, இந்த மருத்துவமனைக்கு மருத்துவர் இல்லை. நானும் எனது உதவியாளர் ஒருவர் மட்டுமே பணியாற்றுவதாக கூறினார். மேலும் இந்த மருத்துவனைமக்கு உயரதிகாரி யார் என கேட்டபோது, தங்கள் உயரதிகாரி உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன் என்றும், அவர் இன்று வரவில்லை என்றார்.

வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட கால்நடை ஆய்வாளர்.

மேலும் அவர் அமைச்சர் சரோஜாவின் மருமகன் என்றும் மிரட்டியுள்ளார். பின்னர் அவரே நாய்க்கு சிகிச்சை அளித்துள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் பணி நேரங்களில் மருத்துவமனையை மூடிவிட்டு, வசதி படைத்தவர்கள் வீட்டிற்கே சென்று சிகிச்சையளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உயரதிகாரிகள் இந்த மருத்துவமனையை ஆய்வு செய்து முழு நேரமும் செயல்படும் வகையில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

-நவீன்குமார்.

 

Leave a Reply