ஏற்காட்டில் மலர்கண்காட்சிக்கான ஆயத்த பணிகள் நடைப்பெற்று வருகிறது.

Potanical Garden

ஏற்காடு தாவரவியல் பூங்காவில், பூச்செடிகளை சுற்றியுள்ள களைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்கள். 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வருடந்தோறும் கோடை காலத்தில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் வரவுள்ள மே மாதம் கோடை விழா மற்றும் மலர்காட்சி நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு, கடந்த வாரம் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தலைமையில் ஏற்காட்டில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு, அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

அதன்படி ஏற்காட்டில் உள்ள தோட்டக்கலைத்துறையின் அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஐந்தினை பூங்கா, ரோஜா தோட்டம் ஆகிய 5 பூங்காக்களிலும் நேற்று முதல் கூடுதலாக பணியாளர்களை நியமித்து மேம்படுத்துதல் பணி விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த பூங்காக்களில் இரண்டு இலட்சம் பூ நாத்துகள் நடப்பட்டுள்ளன.

அண்ணா பூங்காவில் மலர் காட்சிக்காக, மேரி கோல்டு, ப்ரஞ்ச் மேரி கோல்டு, ஜினியா, காஸ்மாஸ், கேலண்டுல்லா, சலிசம், வின்கா, சால்வியா, பேன்சி, டேலியா, ப்ளாஸ்க், ஸ்பெத்திக்குல்லம், வெர்பினா, ஜெரோனியம், பாலிசம், ஆந்தூரியம், கிரிசோந்தியம், உள்ளிட்ட மலர்ச் செடிகள் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் தயார் செய்யும் பணி மேலாளர் குமார் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பாஸ்கர் மேற்பார்வையில் நடைப்பெற்று வருகிறது.

-நவீன்குமார்.

 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அருள்மிகு பட்டத்தரசி அம்மன் கோயில் விழா
திருச்சியில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் அ.தி.மு.க., பா.ஜ.க மற்றும் டி.டிவி தினகரன் அணியினர் இடையே மோதல்!

Leave a Reply